கடலூர் மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் மழை மின்தடையால் மக்கள் அவதி


கடலூர் மாவட்டத்தில்  சூறைக்காற்றுடன் மழை  மின்தடையால் மக்கள் அவதி
x

கடலூர் மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் மழை பெய்ததால் ஏற்பட்ட மின்தடையால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

கடலூர்

கடலூர்,

தெற்கு ஆந்திரா பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் தென்மேற்கு பருவமழை தற்போது வலுவடைந்து வருவதால் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மழைபெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி கடலூரில் இன்று பகலில் கடும் வெயில் சுட்டெரித்த நிலையில், மாலை 5 மணி அளவில் வானில் கருமேகங்கள் சூழ்ந்து குளிர்ந்த காற்று வீசியது. இந்த நிலையில் 6 மணி அளவில் சூறைக்காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல பலத்த மழையாக கொட்டியது. இந்த மழை சுமார் ½ மணி நேரம் நீடித்தது. அதன் பிறகு தூறிக்கொண்டே இருந்தது. சூறைக்காற்றுடன் மழை பெய்த போது கடலூர் நகரில் திருப்பாதிரிப்புலியூர், வண்டிப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் ¾ மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனர்.இதேபோல் பண்ருட்டி, சிதம்பரம், காட்டுமயிலூர், எஸ்.ஆர்.சி. குடிதாங்கி, பெண்ணாடம், விருத்தாசலம் உள்பட மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் இன்று சூறைக்காற்றுடன் பரவலாக மழை பெய்தது.


Next Story