சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் -ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்.
சென்னை,
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சீபுரம் போன்ற மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழை வரை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஆனால் சென்னையில் பெரும்பாலான இடங்களில் வெள்ள தடுப்பு பணிகள் இன்னும் முடியவில்லை.
எனவே வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் கூடுதலாக பணியாட்களை நியமித்து போர்க்கால அடிப்படையில் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்கவும், தோண்டப்பட்ட பள்ளங்களை சுற்றிலும் உடனடியாக தடுப்பு வேலிகள் அமைக்கவும் உரிய உத்தரவுகளை பிறப்பித்து மக்களை பாதுகாக்குமாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story