52 நாட்களுக்கு பிறகு உண்ணாவிரதத்தை கைவிட்டார் ராஜிவ்காந்தி கொலை வழக்கு கைதி முருகன்..!


52 நாட்களுக்கு பிறகு உண்ணாவிரதத்தை கைவிட்டார் ராஜிவ்காந்தி கொலை வழக்கு கைதி முருகன்..!
x

52 நாட்களுக்கு பிறகு வேலூர் ஜெயிலில் ராஜிவ்காந்தி கொலை வழக்கு கைதி முருகன் உண்ணாவிரதத்தை கைவிட்டார்.

வேலூர்,

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் ஜெயிலில் அடைக்கப் பட்டுள்ள முருகன், பரோல் வழங்க வலியுறுத்தி பலமுறை சிறை நிர்வாகத்திடம் மனு அளித்தார். அவர் மீது சிறை விதிமீறல் உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதால் சிறை நிர்வாகம் மறுத்துவிட்டது.

வழக்கை விரைந்து விசாரிக்க வலியுறுத்தி முருகன் கடந்த மாதம் 8-ந் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்தார். சிறை அதிகாரிகள் அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.ஆனால் முருகன் உண்ணாவிரதத்தை கைவிட வில்லை. ஜெயில் உணவை தவிர்த்து அவர் தண்ணீர் மற்றும் பழங்கள் மட்டுமே சாப்பிட்டார். முருகனின் உடல்நிலை மோசமானதால் அவருக்கு ஜெயில் வளாகத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் குளுக்கோஸ் ஏற்றப்பட்டது‌ தொடர்ந்து டாக்டர்கள் அவரது உடல் நிலையை கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த வாரம் சிறை காவலர் ஒருவரை அவதூராக பேசிய வழக்கு சம்பந்தமாக முருகன் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார். அவரிடம் உண்ணாவிரதத்தை கைவிடக்கோரி சிறை அதிகாரிகள் நேற்று பேச்சு வார்த்தை நடத்தினர்.

இந்தநிலையில், 52 நாட்களுக்கு பிறகு முருகன் உண்ணாவிரதத்தை கைவிட்டார். இன்று காலை அவர் ஜெயில் உணவை சாப்பிட்டார்.


Next Story