வேலியில் சிக்கிய அரிய வகை ஆந்தை


வேலியில் சிக்கிய அரிய வகை ஆந்தை
x

கச்சிராயப்பாளையம் அருகே வேலியில் சிக்கிய அரிய வகை ஆந்தை வனத்துறையினர் மீட்பு

கள்ளக்குறிச்சி

கச்சிராயப்பாளையம்

கச்சிராயப்பாளையம் அருகே குதிரைசந்தல் கிராமத்தில் நேற்று காலை பறந்து வந்த அரிய வகை ஆந்தை ஒன்று அங்குள்ள பள்ளி வளாகத்தில் உள்ள வேலியில் சிக்கி பறக்க முடியாமல் தவித்துக்கொண்டிருந்தது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் கள்ளக்குறிச்சி தீயணைப்புத் துறையினர் மற்றும் வனசரகர் கோவிந்தராஜ் தலைமையில் வனத்துறையினர் அங்கு விரைந்து வந்து வேலியில் சிக்கிய ஆந்தையை மீட்டனர். கால்களில் காயம் ஏற்பட்டு இருந்ததால் அதை சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி கால்நடை ஆஸ்பத்திரிக்கு வனத்துறையினர் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை அளித்த பின்னர் அந்த ஆந்தையை வனப்பகுதிக்கு கொண்டு சென்று வனத்துறையினர் விட்டனர். இது குறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த அரிய வகை ஆந்தை கூகை ஆந்தை வகையைச் சேர்ந்தது ஆகும். இது சத்தியமங்கலம், மதுரை போன்ற வனப்பகுதிகளில் தான் இந்த ஆந்தை அதிக அளவில் காணப்படும். கல்வராயன்மலையில் இந்த வகை ஆந்தைகள் கிடையாது. இவை கூட்டம் கூட்டமாக தான் இருக்கும். தனியாக இருக்காது. அப்படி இருக்கும்போது இந்த ஆந்தை மட்டும் எப்படி பிரிந்து தனியாக வந்தது என்று தெரியவில்லை. இது குறித்து நாங்கள் விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்றார்.


Next Story