சரக்கு வேனில் கடத்த முயன்ற 2½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
ராயக்கோட்டையில் இருந்து கர்நாடகாவுக்கு சரக்கு வேனில் கடத்த முயன்ற 2½ டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராயக்கோட்டையில் இருந்து கர்நாடகாவுக்கு சரக்கு வேனில் கடத்த முயன்ற 2½ டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
வாகன சோதனை
கிருஷ்ணகிரி மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி தலைமையில் போலீசார்் கெலமங்கலம் - ராயக்கோட்டை சாலையில் உள்ளுக்குறுக்கி கிராமத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேனை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் 50 சாக்கு பைகளில் 2½ டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக டிரைவர் மற்றும் உடன் வந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு முத்துகவுண்டர் தெருவை சேர்ந்த டிரைவர் நஞ்சப்பன் (வயது41), தேன்கனிக்கோட்டை அருகே உள்ள தொட்டதிம்மனஅள்ளியை சேர்ந்த செல்வராஜ் (46) ஆகியோர் என்பது தெரியவந்தது.
கைது-பறிமுதல்
இவர்கள் 2 பேரும் ராயக்கோட்டை அருகே உள்ள கொல்லப்பட்டி, பிள்ளையார் அக்ரஹாரம், புல்லட்டி, உள்ளுகுறுக்கி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, கர்நாடகாவுக்கு விற்பனை செய்ய கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து டிரைவர் உள்பட 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து ரேஷன் அரிசி மற்றும் சரக்கு வேனை போலீசார் பறிமுதல் செய்தனர்.