ரேஷன் கடைகளை அடைத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்


ரேஷன் கடைகளை அடைத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்
x

திருவாரூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகளை அடைத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் பணி பாதிக்கப்பட்டு உள்ளது.

திருவாரூர்

திருவாரூர்;

திருவாரூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகளை அடைத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் பணி பாதிக்கப்பட்டு உள்ளது.

கோரிக்கைகள்

பொது வினியோக திட்டத்துக்கு தனித்துறை உருவாக்கப்பட வேண்டும். 5 மாத காலமாக நிறுத்தி வைக்கப்பட்ட 17 சதவீத அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் அனைத்தையும் சரியான எடையில் பொட்டலமாக வழங்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஒய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தினர் 3 நாட்கள் ரேஷன் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தப்படும் என அறிவித்து இருந்தனர்.

வேலை நிறுத்தம்

இதன்படி திருவாரூர் மாவட்டடத்தில் ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர் நேற்று ரேஷன் கடைகளை அடைத்து 3 நாட்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். மேலும் போராட்டத்தை விளக்கி திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில துணைத்தலைவர் குணசீலன் தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாகுல் அமீது முன்னிலை வகித்தார்.ரேஷன் கடை பணியாளர் சங்க ஓய்வு பெற்ற மாநில அமைப்பாளர் நெடுஞ்செழியன், மாவட்ட பொருளாளர் சாமிநாதன், தலைமை நிலைய ஆலோசகர் அறிவழகன், மாவட்ட துணைத்தலைவர் தங்கராசு, மாநில செயற்குழு உறுப்பினர் வேலாயுதம் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

அத்தியாவசிய பொருட்கள்

திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 720 ரேஷன் கடைகள் செயல்பட்டு வரும் நிலையில் சுமார் 400 ரேஷன் கடை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் பணி பாதிக்கப்பட்டு் பொதுமக்கள் சற்று சிரமம் அடைந்தனர். இந்த வேலை நிறுத்தம் இன்றும்(புதன்கிழமை) நாளையும் நடைபெறும் என ரேஷன் கடை பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story