நீர்வரத்து அதிகரிப்பால் மேட்டூர் அணை 16 கண் மதகுகள் வழியாக மீண்டும் தண்ணீர் திறப்பு கரையோர மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை


நீர்வரத்து அதிகரிப்பால்  மேட்டூர் அணை 16 கண் மதகுகள் வழியாக மீண்டும் தண்ணீர் திறப்பு  கரையோர மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை
x

நீர்வரத்து அதிகரிப்பால் மேட்டூர் அணை 16 கண் மதகுகள் வழியாக மீண்டும் தண்ணீர் திறப்பு கரையோர மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை

சேலம்

மேட்டூர்,

மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியை எட்டி சுமார் ஒரு மாத காலமாக இதே நீர்மட்டம் இருந்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. அதாவது அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 22 ஆயிரம் வினாடிக்கு மேல் வரும் நிலையில், 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. கடந்த வாரம் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இதன் காரணமாக கடந்த 26-ந் தேதி முதல் 16 கண் மதகுகள் வழியாக உபரிநீர் திறப்பது நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

இந்த நீர்வரத்தானது நேற்று காலை வினாடிக்கு 20 ஆயிரம் கன அடியாகவும், மாலையில் வினாடிக்கு 21 ஆயிரத்து 500 கனஅடியாகவும் இரவில் வினாடிக்கு 26 ஆயிரம் கனஅடியாகவும் அதிகரித்தது. இதனால் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் அணையை ஒட்டி அமைந்துள்ள நீர்மின்நிலையங்கள் வினாடிக்கு 21 ஆயிரத்து 500 கனஅடி வீதமும் 16 கண் மதகுகள் வழியாக வினாடிக்கு 3 ஆயிரத்து 500 கனஅடி வீதமும் கால்வாய் பாசன தேவைக்காக வினாடிக்கு 750 கனஅடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

அதாவது 5 நாட்களுக்கு பிறகு மீண்டும் அணையின் உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக நேற்று இரவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 16 கண் மதகுகள் வழியாக மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டதை தொடர்ந்து மேட்டூர் வருவாய்த்துறையினர் 16 கண் மதகுகள் பகுதியை ஒட்டி அமைந்துள்ள தங்கமாபுரிப்பட்டணம் பகுதியில் ஒலிபெருக்கி மூலம் தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறு ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகிறார்கள்.


Next Story