சுத்தமலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
சுத்தமலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
மூங்கில்துறைப்பட்டு
மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள சுத்தமலை கிராமத்தில் பொதுப்பணி துறைக்கு சொந்தமான தென்பெண்ணை ஆற்றின் கரையை ஆக்கிரமித்து சாகுபடி செய்துள்ள பயிர்களை அகற்ற வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் புகார் தெரிவித்திருந்தனர். இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மூங்கில்துறைப்பட்டு பொதுப்பணித்துறை அதிகாரி முருகேசன் தலைமையில் வருவாய்த்துறையினர் தென்பெண்ணையாற்றின் கரையோரம் சாகுபடி செய்யப்பட்ட கரும்பு, மணிலா உள்ளிட்ட பயிா்கள், தென்னை மரங்கள் ஆகியவற்றை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர். அப்போது அந்த பகுதி விவசாயிகள் நில அளவுகளை சரியான முறையில் பார்த்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கூறி அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். அவர்களிடம் பாதுகாப்புக்கு நின்ற போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.