காற்றில் முறிந்து விழுந்த மரக்கிளைகள் அகற்றம்


காற்றில் முறிந்து விழுந்த மரக்கிளைகள் அகற்றம்
x

புதுக்கோட்டையில் கன மழை மற்றும் பலத்த காற்றில் முறிந்து விழுந்த மரக்கிளைகள் அகற்றப்பட்டன. மின் ஒயர்கள் சீரமைக்கப்பட்டன.

புதுக்கோட்டை

மரக்கிளைகள் அகற்றம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை கனமழை பெய்தது. மேலும் பலத்த காற்று வீசியது. இதில் புதுக்கோட்டை நகரில் பல இடங்களில் மரங்கள் சரிந்தன. மேலும் மரக்கிளைகள் முறிந்து அருகில் சென்ற மின்ஒயர்கள், கேபிள் ஒயர்கள் மீதும், சாலையிலும் விழுந்தன. இதனால் மின்சாரம் துண்டிப்பு ஏற்பட்டதோடு போக்குவரத்து பாதிப்படைந்தது. இந்த நிலையில் மின்சாரம் துண்டிப்பு ஏற்பட்டதை இரவில் மின்சார வாரிய அதிகாரிகள் சரி செய்தனர். இரவிலும் மழை தூறியப்படி இருந்தது. இந்த நிலையில் நேற்று காலை மழை பெய்யவில்லை. வழக்கம் போல வெயில் அடித்தது. இதையடுத்து புதுக்கோட்டை நகரில் ஆங்காங்கே சாலையில் விழுந்து கிடந்த மரக்கிளைகள், மரங்களை அப்புறப்படுத்தும் பணி நகராட்சி நிர்வாகம் மூலம் நடைபெற்றது. புதுக்கோட்டை சாந்தநாதபுரம், பெரியார்நகர், கம்பன் நகர் பகுதியில் மரக்கிளைகள் அகற்றப்பட்டன.

மழை அளவு விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நேர நிலவரப்படி பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:- ஆதனக்கோட்டை-51, பெருங்களூர்-53, புதுக்கோட்டை-123, ஆலங்குடி-75, கந்தர்வகோட்டை-12, கறம்பக்குடி-15.80, மழையூர்-54.60, கீழணை-18, அரிமளம்-23.60, அறந்தாங்கி-11, ஆயிங்குடி-37.40, நாகுடி-13, ஆவுடையார்கோவில்-23.40, மணமேல்குடி-12, இலுப்பூர்-27, குடுமியான்மலை-7, அன்னவாசல்-25, விராலிமலை-35, உடையாளிப்பட்டி-3.50, கீரனூர்-20, பொன்னமராவதி-20, காரையூர்-49.

ஆலங்குடி

ஆலங்குடி அருகே வாராப்பூர் ஊராட்சியில் பெய்த மழையால் மின் ஒயர்கள் அறுந்து கிடந்தது. மேலும் மரக்கிளைகளும் ஒடிந்து கிடந்தன. இதையடுத்து மின்ஒயர்கள் மின் அதிகாரிகள் மூலம் சீரமைக்கப்பட்டது. மரக்கிளைகளும் அகற்றப்பட்டது.


Next Story