இளையான்குடியில் குடியரசு தினவிழா
இளையான்குடியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
இளையான்குடி
இளையான்குடியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இளையான்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி எம்.ஹரி ராமகிருஷ்ணன் தேசிய கொடி ஏற்றினார். நிகழ்ச்சியில் வக்கீல் சங்க தலைவர் கல்யாணி, வக்கீல்கள் குமார், பாலையா, ரவி, ஜான் சேவியர், வட்ட சட்ட பணிகள் குழு இளவரசன் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர். டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி மற்றும் கல்வியியல் கல்லூரியில் சாலையூர் அமானுல்லா கான், அப்துல் ரசாக் ஆகியோர் தேசிய கொடி ஏற்றி னர். இதில், கல்லூரி முதல்வர் அப்பாஸ் மந்திரி, கல்வியியல் கல்லூரி முதல்வர் முகமது முஸ்தபா, கல்லூரி தலைவர் அஹமது ஜலாலுதீன், செயலர் ஜபருல்லாஹ்கான், கணிதவியல் உதவி பேராசிரியர் ஆரிப் ரகுமான் கலந்து கொண்டனர். இளையான்குடி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் அசோக்குமார், போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ராபர்ட் ஜெயின், அரசு ஆஸ்பத்திரியில் தலைமை மருத்துவர் சரண்ராஜ் ஆகியோர் தேசிய கொடி ஏற்றினர்.