கோரிக்கை


கோரிக்கை
x

மலேசியாவில் இறந்தவர் உடலை மீட்டு தர கோரிக்கை வைக்கப்பட்டது.

சிவகங்கை

சிவகங்கை,

மானாமதுரை கிருஷ்ணராஜபுரம் காலனியை சேர்ந்தவர் மோகனசுந்தரம், இவருக்கு செந்திலா என்ற மனைவியும் ஸ்ரீரியாஸ் என்கிற மகனும் கனிஷ்கா என்கிற மகளும் உள்ளனர். மோகனசுந்தரம் கடந்த 2018-ம் ஆண்டு மலேசிய நாட்டிற்கு கார் டிைரவர் வேலைக்காக சென்றுள்ளார். ஆனால் அங்கு அவருக்கு கார் சுத்தம் செய்யும் பணி வழங்கப்பட்டது. அத்துடன் முறையாக ஊதியமும் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 21-ந்தேதி தனது மனைவி செந்திலாவை செல்போன் மூலம் தொடர்புகொண்ட மோகனசுந்தரம் தன்னை அடித்து கொடுமைப்படுத்துவதாக தெரிவித்துள்ளார். அதன் பின் கடந்த 24-ந்தேதி மனைவி செந்திலா கணவரை தொடர்பு கொண்டபோது செல்போன் அழைப்பை ஏற்று பேசிய மோகனசுந்தரத்தின் நிறுவன உரிமையாளர் மோகனசுந்தரம் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக கூறி இணைப்பை துண்டித்தாராம்.பின்னர் 25-ந் தேதி காலை மோகனசுந்தரம் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி செந்திலா சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டியிடம் மனு ஒன்றை கொடுத்தார். அதில் மலேசியாவில் இறந்து போன தன் கணவரின் இறப்பில் மர்மம் இருப்பதாகவும் இது குறித்து விசாரணை நடத்த உதவிட வேண்டும் என்றும் அத்துடன் அவரது உடலை மீட்டு தரவேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.


Next Story