கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை
கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை பா.ம.க. கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது
மயிலாடுதுறையில், பா.ம.க. தெற்கு ஒன்றிய பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் நீடூர் மதிவாணன் தலைமை தாங்கினார். ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் குயில்வளவன் முன்னிலை வகித்தார். ஒன்றிய அமைப்பு செயலாளர் கோடங்குடி கண்ணன் வரவேற்று பேசினார். இதில் மாவட்ட செயலாளர் சித்தமல்லி பழனிசாமி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் காசி.பாஸ்கரன், காமராஜ், மாவட்ட அமைப்பு செயலாளர்கள் தங்க.செந்தில்நாதன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். பள்ளி, கல்லூரிகள் அருகில் கஞ்சா விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களின் நலன்கருதி காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் ரவிசேதுராயர், ஒன்றிய நிர்வாகிகள் பிரகாஷ், விஜி, ஆனந்தராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய இளைஞரணி செயலாளர் நரேந்திரபாலா நன்றி கூறினார்.