குவைத்தில் தவித்த 20 தமிழ் இளைஞர்கள் மீட்பு: தமிழக அரசின் நடவடிக்கை மகிழ்ச்சியளிக்கிறது - ராமதாஸ்


குவைத்தில் தவித்த 20 தமிழ் இளைஞர்கள் மீட்பு: தமிழக அரசின் நடவடிக்கை மகிழ்ச்சியளிக்கிறது - ராமதாஸ்
x

கோப்புப்படம்

குவைத்தில் தவித்த 20 இளைஞர்களை தமிழக அரசு மீட்டு வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை,

குவைத்தில் வேலைக்கு சென்று ஏமாற்றப்பட்டு, தாயகம் திரும்ப முடியாமல் தவித்துக் கொண்டிருந்த 20 இளைஞர்களை தமிழக அரசு மீட்டு வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "குவைத்தில் வேலைக்கு சென்று ஏமாற்றப்பட்டு, தாயகம் திரும்ப முடியாமல் தவித்துக் கொண்டிருந்த அரியலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 20 இளைஞர்களை தமிழக அரசு மீட்டு தாயகத்திற்கு அழைத்து வந்துள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.

குவைத்தில் தமிழக இளைஞர்கள் அனுபவித்து வரும் கொடுமைகள் குறித்து விளக்கி, அவர்களை மீட்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த ஆகஸ்ட் 24-ஆம் நாள் அறிக்கை வெளியிட்டிருந்தேன். அதைத் தொடர்ந்து தமிழக அரசு அவர்களை மீட்டு வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. மீட்கப்பட்டு வந்த இளைஞர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட வாழ்வாதார உதவிகளை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.



Next Story