ரிஷிவந்தியம் ஒன்றியக்குழு கூட்டம்


ரிஷிவந்தியம் ஒன்றியக்குழு கூட்டம்
x
தினத்தந்தி 23 April 2023 12:15 AM IST (Updated: 23 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

ரிஷிவந்தியம் ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி

ரிஷிவந்தியம்,

ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் அதன் தலைவர் வடிவுக்கரசி சாமிசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. துணை தலைவர் சென்னம்மாள் அண்ணாதுரை, வட்டார வளர்ச்சி அலுவலர் ரங்கராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலாளர் தினகர்பாபு வரவேற்றார். அலுவலக உதவியாளர் பிரபாகரன் தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில், ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story