வைகை ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பு


வைகை ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பு
x

வைகை ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து வருகிறது.

சிவகங்கை

திருப்புவனம்,

திருப்புவனம் வைகை ஆற்றின் உயர்மட்ட பாலத்தின் அருகே மேல்புறம் படுகை அணை கட்டப்பட்டு உள்ளது. இந்தப் படுகை அணையின் அருகே அருப்புக்கோட்டை, திருப்புவனம், மதுரை உள்ளிட்ட குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் இந்த பகுதியில் செயல்பட்டு வரும் குடிநீர் திட்ட பணிகளுக்கு நீர் ஆதாரம் கிடைத்து வந்தது. தற்போது மழை தொடர்ந்து பெய்து வருவதாலும், ஆற்றுப்பகுதியில் ஈரத்தன்மை காணப்படுவதாலும் வைகை அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் 2 நாட்களில் திருப்புவனம் படுகை அணையை தாண்டி செல்கிறது. இதனால் கிணற்றுப்பகுதிகளில் நீர்மட்டம் அதிகரிக்க கூடும் என தெரியவருகிறது.மதுரை, தேனி மாவட்டங்களில் பெய்த பலத்த மழையால் வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் திருப்புவனம் வைகை ஆற்றில் கட்டப்பட்டுள்ள படுகை அணை நிரம்பி தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.


Next Story