பழுதடைந்த சாலையால் விபத்து ஏற்படும் அபாயம்
காங்கயம் அருகே பழுதடைந்த சாலையால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் சாலை சீரமைக்கப்படுமா? என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்பில் உள்ளனர்.
காங்கயம்
காங்கயம் அருகே பழுதடைந்த சாலையால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் சாலை சீரமைக்கப்படுமா? என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்பில் உள்ளனர்.
குண்டும், குழியுமான சாலை
காங்கயம் - கோவை சாலை போக்குவரத்து மிகுந்த சாலையாகும். இந்த சாலையில் தினந்தோறும் கனரக வாகனங்கள், அரசு மற்றும் தனியார் பஸ்கள், இருசக்கர வாகனங்கள் உள்பட ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த நிலையில் காங்கயம் - கோவை சாலையில் உள்ள கவுண்டம்பாளையம் வரை சாலையின் நடுவே சேதம் அடைந்து ஆங்காங்கே சிறு சிறு பள்ளங்கள் உருவாகியுள்ளது. இதன் காரணமாக இரவு நேரங்களில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும் இருசக்கர வாகனத்தில் செல்வோர் கீழே விழும் சூழ்நிலையும் ஏற்பட வாய்ப்புள்ளது.
சீரமைக்க வேண்டும்
எனவே போக்குவரத்து மிகுந்த இந்த சாலையின் நடுவே ஏற்பட்டுள்ள பள்ளங்களால் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நேரில் சென்று பார்வையிட்டு பழுதடைந்த இந்த சாலையை சரிசெய்து, சீரான வாகன போக்குவரத்திற்கு வழிவகை செய்ய வேண்டுமென வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.