வாய்க்காலில் விழுந்த தொழிலாளி சாவு
நாச்சியார்கோவில் அருகே மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தார்.
திருவிடைமருதூர்;
நாச்சியார்கோவில் அருகே மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தார்.
தொழிலாளி
கும்பகோணம் அருகே உள்ள பாதரக்குடி மேட்டு தெருவை சேர்ந்தவர் பழனிவேல். இவருடைய மகன் பந்தளராஜன்(வயது22). இவர் மருதநல்லூர் அருகே கருவளர்ச்சேரியில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி சென்ட்ரிங் வேலைக்கு சென்று வந்தார். நேற்று முன்தினம் இரவு தனது நண்பர் ராம்குமாரிடம் கடைக்கு செல்வதாக கூறி அவரது மோட்டார் சைக்கிளை பெற்றுக்கொண்டு பந்தளராஜன் சென்றார்.
பரிதாப சாவு
அழகாபுத்தூர் மெயின் ரோட்டில் அவர் சென்ற போது அங்கு உள்ள புங்கை மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து வாய்க்காலில் விழுந்த பந்தளராஜன் பரிதாபமாக இறந்தார். அவரது உடல் பிரேத பரிேசாதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து நாச்சியார் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.