அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் பலி


அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் பலி
x

ஒரத்தநாடு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் உயிரிழந்தார்.

தஞ்சாவூர்

ஒரத்தநாடு;

ஒரத்தநாட்டை அடுத்துள்ள சேதுராயன்குடிக்காடு மேலத்தெருவை சேர்ந்தவர் சித்தார்த்தன். இவருடைய மனைவி மாலா (வயது52). நேற்று இவர் சேதுராயன்குடிக்காட்டில் இருந்து ஒரத்தநாட்டுக்கு வல்லம் பிரிவு சாலை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே சாலையில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மாலா மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த மாலா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த ஒரத்தநாடு போலீசார் மாலாவின் உடலை கைப்பற்றி ஒரத்தநாடு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்து மாலா மீது மோதிய வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story