சேலத்தில் முஸ்லிம் அமைப்பினர் சாலை மறியல்


சேலத்தில் முஸ்லிம் அமைப்பினர் சாலை மறியல்
x

சேலத்தில் முஸ்லிம் அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சேலம்

சேலம்:

சேலத்தில் முஸ்லிம் அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது முகநூலில் இந்து மதம் குறித்து அவதூறு கருத்து பதிவிட்டுள்ளதாக கிச்சிப்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு புகார் சென்றது. அதன்பேரில் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இதனிடையே அந்த வாலிபர் சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே முஸ்லிம் யூத் லீக் அமைப்பு சார்பில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்தார்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்று அவரை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றினர். இதை கண்டித்து முஸ்லிம் அமைப்பினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மேலும் போலீஸ் வாகனத்தின் முன்னால் அவர்கள் படுத்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

தள்ளுமுள்ளு

இதையடுத்து அவர்களை அங்கிருந்து போலீசார் அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அந்த வாலிபரை போலீசார் விடுவித்தனர். இதையடுத்து அங்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டம் முடிவடைந்ததும் மீண்டும் அந்த வாலிபரை விசாரணைக்காக போலீசார் கிச்சிப்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இதனால் போலீசாரை கண்டித்தும், வாலிபரை விடுவிக்க கூறியும் கலெக்டர் அலுவலகம் அருகே முஸ்லிம் அமைப்பினர் தொடர்ந்து இரவிலும் போராட்டம் நடத்தினர்.


Next Story