பா.ஜ.க.வினர் சாலை மறியல்


பா.ஜ.க.வினர் சாலை மறியல்
x

மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பா.ஜ.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கடலூர்

கடலூர்:

கடலூரில் இன்று நடந்த மாநகராட்சி கூட்டத்தில் 28-வது வார்டு பா.ஜ.க. கவுன்சிலர் சக்திவேல், தனது வார்டில் மாநகராட்சி சார்பில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு தன்னை அழைப்பதில்லை என்றும், தனது கோரிக்கைகள் ஒன்று கூட நிறைவேற்றப்படவில்லை என்றும் கூறி கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தார். தொடர்ந்து அவர் பா.ஜ.க. நிர்வாகிகளுடன் சேர்ந்து கடலூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டார். அப்போது பா.ஜ.க. கவுன்சிலர் என்பதால் அவரது கோரிக்கைகளை புறக்கணிக்கும் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், மேயர் பதவி விலக கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.

இதுபற்றி அறிந்து வந்த புதுநகர் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் ஆகியோர் மறியலில் ஈடுபட்ட பா.ஜ.க.வினரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்த மறியலால் கடலூர் பாரதி சாலையில் சுமார் ¼ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story