கிள்ளியூர் தொகுதியில் ரூ.4¼ கோடியில் சாலை சீரமைக்கும் பணி


கிள்ளியூர் தொகுதியில் ரூ.4¼ கோடியில் சாலை சீரமைக்கும் பணி
x

கிள்ளியூர் தொகுதியில் ரூ.4¼ கோடியில் சாலை சீரமைக்கும் பணி தொடங்கியது.

கன்னியாகுமரி

கருங்கல்,

கிள்ளியூர் தொகுதியில் ரூ.4¼ கோடியில் சாலை சீரமைக்கும் பணி தொடங்கியது.

சாலை சீரமைக்கும் பணி

கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட கருங்கல், பாலப்பள்ளம், கீழ்குளம், கிள்ளியூர் பேரூராட்சிகளில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளையும் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார். இதனை தொடர்ந்து நபார்டு திட்டத்தின் கீழ் கருங்கல் பேரூராட்சிக்குட்பட்ட மலையன்விளை-காக்கவிளை சாலையை சீரமைக்க ரூ.82 லட்சமும், பாலவிளை-இரட்டை குளம் சாலையை சீரமைக்க ரூ.54 லட்சமும், பாலப்பள்ளம் பேரூராட்சிக்குட்பட்ட மிடாலக்காடு-மிடாலக்குளம் சாலையை சீரமைக்க ரூ.86 லட்சமும், கீழ்குளம் பேரூராட்சிக்குட்பட்ட செந்தறை-உடவிளை சாலையை சீரமைக்க ரூ.70 லட்சமும், குமரி நகர் - காளியர் தோட்டம்-அரச குளம் சாலையை சீரமைக்க ரூ.54.75 லட்சமும், கிள்ளியூர் பேரூராட்சிக்குட்பட்ட செவ்வேலி-மாங்கரை- ஐ.ஓ.பி. வங்கி சாலையை சீரமைக்க ரூ.77 லட்சமும் என 6 சாலைகளுக்கு ரூ.4 கோடியே 23 லட்சத்து 75 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சாலை சீரமைக்கும் பணியை தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ், ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பாலப்பள்ளம் பேரூராட்சி தலைவர் டென்னிஸ், கருங்கல் பேரூராட்சி தலைவர் சிவராஜ், கீழ்குளம் பேரூராட்சி துணை தலைவர் விஜய குமார், கருங்கல் பேரூராட்சி துணை தலைவர் செல்வம், கருங்கல் நகர காங்கிரஸ் தலைவர் குமரேசன், கிள்ளியூர் பேரூராட்சி காங்கிரஸ் தலைவர் கிளமெண்ட் பிரேம்குமார், பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story