சாலை மறியல் போராட்டம் வாபஸ்


சாலை மறியல் போராட்டம் வாபஸ்
x

அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் முத்துப்பேட்டையில் நடக்க இருந்த சாலை மறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

திருவாரூர்

முத்துப்பேட்டை;

100 வேலை செய்த பணியாளர்களுக்கு கொடுக்க வேண்டிய ஊதியத்தை உடனே வழங்க வேண்டும், விவசாய பணிகளில் நூறுநாள் வேலையை விரிவுபடுத்த வேண்டும், 100 நாள் வேலை தொடங்காத ஊராட்சிகளில் உடனடியாக தொடங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முத்துப்பேட்டை தமிழ்மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் இன்று(வியாழக்கிழமை) எடையூர் சங்கேந்தி கடைதெருவில் சாலை மறியல் போராட்டம் நடக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதைத்தொடா்ந்து நேற்று முத்துப்பேட்டை தாசில்தாா் அலுவலகத்தில் சமாதான கூட்டம் தாசில்தார் மகேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.இதில் போராட்டக்குழு சார்பில் சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் சந்திர சேகர ஆசாத், விவசாய சங்க மாவட்ட துணைச்செயலாளர் முருகையன், கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் உமேஷ் பாபு, நகர செயலாளர் மார்க்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனா். கூட்டத்தில் அதிகாரிகள் தரப்பில் 100 நாள் வேலை ஊதியத்தை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். 100 நாள் வேலை தொடங்காத ஊராட்சிகளில் விரைவில் பணிகள் தொடங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எழுத்து பூர்வமாக உறுதி அளித்தனர். இதன்பேரில் இன்று நடக்க இருந்த சாலை மறியல் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.


Related Tags :
Next Story