போக்குவரத்துக்கு இடையூறாக திரியும் மாடுகள்


போக்குவரத்துக்கு இடையூறாக திரியும் மாடுகள்
x

போக்குவரத்துக்கு இடையூறாக திரியும் மாடுகள்

தஞ்சாவூர்

கும்பகோணம் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித் திரியும் மாடுகளால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே மாடுகளை சாலையில் திரிய விடும் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

போக்குவரத்துக்கு இடையூறு

கும்பகோணம் ஆன்மிக சுற்றுலா தளமாக விளங்கி வருகிறது. இதனால் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் கும்பகோணத்துக்கு வருகின்றனர்.

இந்த நிலையில் சுவாமிமலை தாராசுரம் திருநாகேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் மாடுகள் சுற்றி திரிகின்றன. பகல், இரவு என எந்நேரமும் நகர்பகுதி கடைவீதிகளில் சாவகாசமாக உலா வரும் கால்நடைகள் அங்கு தேங்கிக்கிடக்கும் காய்கறி பழக்கழிவுகள், ஓட்டல்கள், மளிகை கடைகளிலிருந்து வீசப்படும் கழிவுகளை தின்று வருகின்றன.

அபராதம்

பகலில் கடைத்தெருவில் வலம் வரும் மாடுகள் வியாபாரிகளுக்கு மிகுந்த இடையூறை அளிக்கிறது. சில மாடுகள் மக்களை முட்டித்தள்ளி காயப்படுத்துகிறது.

கும்பகோணம் பகுதியில் பல்வேறு இடங்களி்ல் நடுரோட்டில் மாடுகள் கூட்டமாக நின்று கொண்டும், படுத்தும் கிடக்கின்றன. இதனால்

வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி அடிக்கடி விபத்துகளில் சிக்குகிறார்கள். எனவே போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து பட்டியில் அடைக்க வேண்டும். மேலும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story