சீர்காழி அருகே கூரை வீடுகள் எரிந்து நாசம்


சீர்காழி அருகே கூரை வீடுகள் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 1 Jun 2023 12:15 AM IST (Updated: 1 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழி அருகே கூரை வீடுகள் எரிந்து நாசம் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. நிவாரணம் வழங்கினார்

மயிலாடுதுறை

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் ஒன்றியம் ஓதவந்தான்குடி கிராமத்தை சேர்ந்த ரங்கசாமி மனைவி வெண்ணிலா. இவர் தனது கூரை வீட்டில் குடும்பத்தோடு வசித்து வந்தார். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு எதிர்பாராமல் கூரை வீடு எரிந்து முற்றிலும் நாசமானது. இதில் வீட்டில் இருந்த உடை, உணவு உள்ளிட்ட அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாயின. தகவல் அறிந்த சீர்காழி பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., கொள்ளிடம் ஒன்றிய குழு தலைவர் ஜெயபிரகாஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கினர். அப்பொழுது ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமார், வருவாய் ஆய்வாளர் சுகன்யா ,கிராம நிர்வாக அலுவலர் அம்பிகா, தி.மு.க மாவட்ட பிரதிநிதி ராமலிங்கம், இளைஞர் அணி நிர்வாகி ராஜ்குமார் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். இதேபோல் தீ விபத்துக்குள்ளான ராஜமாணிக்கம் மனைவி ராஜா ராணி ஆகிய குடும்பத்தினருக்கும் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. நிவாரண உதவிகளை வழங்கினார்.


Next Story