பூட்டிய கடையில் ரூ.1 லட்சம்-பொருட்கள் திருட்டு
புதுக்கோட்டையில் பூட்டிய கடையில் ரூ.1 லட்சம் மற்றும் பொருட்கள் திருட்டு போனது.
திருட்டு
புதுக்கோட்டையை சேர்ந்தவர் சிங்கமுத்து (வயது 52). இவர் பிருந்தாவனம் பகுதியில் மியூசிக்கல் கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 18-ந் தேதி இரவு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். இந்த நிலையில் அன்றைய தினம் இரவு இவரது கடையில் பூட்டியிருந்த கதவினை உடைத்து மர்மநபர்கள் உள்ளே புகுந்தனர்.
மேலும் கடையில் இருந்து ரூ.1 லட்சம் மற்றும் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பென்டிரைவ்கள், ரூ.10 ஆயிரம் மதிப்பிலான ஹார்டு டிஸ்க் ஆகியவற்றை திருடிவிட்டு தப்பிச்சென்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை கடையை திறக்க வந்த சிங்கமுத்து அதிர்ச்சியடைந்தார். இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக டவுன் போலீஸ் நிலையத்தில் சிங்கமுத்து புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கண்காணிப்பு கேமரா
மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சி மூலம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் சிங்கமுத்து கடையின் அருகே உள்ள பிரியாணி கடையிலும் திருட்டு நடந்துள்ளது. இதில் ரூ.10 ஆயிரம் திருட்டுபோகி உள்ளது. இதுதொடர்பாகவும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை பிடிக்க போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.