கிருஷ்ணகிரியில் ரூ.1.42 கோடி மதிப்பில் தானியங்கி பட்டு நூற்பாலை: அமைச்சர் திறந்து வைத்தார்


கிருஷ்ணகிரியில் ரூ.1.42 கோடி மதிப்பில் தானியங்கி பட்டு நூற்பாலை: அமைச்சர் திறந்து வைத்தார்
x

கிருஷ்ணகிரி மாவட்டம் பெத்தசிகரலப்பள்ளி கிராமத்தில் ரூ.1 கோடியே 42 லட்சம் மதிப்பில் புதிதாக தானியங்கி பட்டு நூற்பாலை நிறுவப்பட்டுள்ளது.

சென்னை,

கிருஷ்ணகிரி மாவட்டம் பெத்தசிகரலப்பள்ளி கிராமத்தில் ரூ.1 கோடியே 42 லட்சம் மதிப்பில் புதிதாக நிறுவப்பட்டுள்ள தானியங்கி பட்டு நூற்பாலையை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார்.

2,384 பட்டு விவசாயிகளுக்கு ரூ.10 கோடியே 96 லட்சம் மானியத்தை வழங்கும் பொருட்டு சூளகிரியில் இன்று நடைபெற்ற விழாவில் 550 பட்டு விவசாயிகளுக்கு ரூ.7 கோடியே 46 லட்சம் மானியத்தை அமைச்சர் தா.மோ. அன்பரசன் வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

இந்த விழாவின் மூலம், தமிழகம் முழுவதும் உள்ள 2,384 பட்டு விவசாயிகளுக்கு ரூ.10 கோடியே 96 லட்சம் மானியம் வழங்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழகம் முழுவதும் 5000 ஏக்கரில் மல்பெரி நடவு செய்யும் விவசாயிகளுக்கு, ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், முதல் கட்டமாக 2,559 ஏக்கர் பரப்பளவில் மல்பெரி நடவு செய்த, 1,975 விவசாயிகளுக்கு ரூ.4 கோடியே 4 லட்சம் மானியமாக வழங்கப்பட உள்ளது.

பெத்தசிகரலப்பள்ளி 400 முனைகள் கொண்ட புதிய தானியங்கி பட்டு நூற்பு ஆலை ஒன்றிய-மாநில அரசின் ரூ.1 கோடியே 5 லட்சம் மானியத்துடன் பயனாளிகளின் பங்களிப்பாக ரூ. 37 லட்ச மும் சேர்த்து மொத்தம் ரூ.1 கோடியே 42 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப் பட்ட ஆலை இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நூற்பு ஆலையானது ஒரு நாளைக்கு 780 கிலோ வெண்பட்டு கூடுகளை கொண்டு 120 கிலோ கச்சா பட்டு நூலினை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.


Next Story