சாலை விபத்தில் இறந்த போலீஸ்காரரின் குடும்பத்திற்கு ரூ.16 லட்சம் உதவித்தொகை
சாலை விபத்தில் இறந்த போலீஸ்காரரின் குடும்பத்திற்கு ரூ.16 லட்சம் உதவித்தொகை வழங்கப்பட்டன.
கரூர்
கரூர் மாவட்டத்தை சேர்ந்த அஜித். இவர் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தமிழ்நாடு சிறப்பு காவல்படையில் 2-ம் நிலை காவலராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் எதிர்பாராதவிதமாக கடந்த மார்ச் மாதம் நடந்த ஒரு சாலை விபத்தில் அஜித் உயிரிழந்தார். இதையடுத்து அவருடைய குடும்பத்தாருக்கு 2017 பேட்ஜ் காக்கும் உறவுகள் சார்பில் தமிழ்நாட்டில் உள்ள 36 மாவட்டத்தில் இருந்து 5,324 போலீசார் வழங்கிய உதவித்தொகை ரூ.16 லட்சத்து 27 ஆயிரத்து 439-ஐ கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் மூலம் அஜித்தின் குடும்பத்திற்கு நேற்று வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story