பெண்ணிடம் ரூ.3½ லட்சம் நகை பறிப்பு


பெண்ணிடம் ரூ.3½ லட்சம் நகை பறிப்பு
x
தினத்தந்தி 24 April 2023 6:45 PM GMT (Updated: 24 April 2023 6:47 PM GMT)

சின்னசேலம் அருகே தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் ரூ.3½ லட்சம் நகையை மர்மநபர் பறித்து சென்றார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி

சின்னசேலம்

சின்னசேலம் அருகே உள்ள நமச்சிவாயபுரத்தை சேர்ந்தவர் ராயதுரை (வயது 56). இவரது மனைவி முத்துலட்சுமி (48). இவர்களது மகள் தனுசு(29). இவருக்கும், கதிர்வேல் என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். தனுசு தனது குடும்பத்துடன் பெற்றோர் வீட்டிலேயே தங்கியிருந்தார்.

இந்நிலையில் சம்பவத்தன்று இரவு முத்துலட்சுமி இயற்கை உபாதை கழிப்பதற்காக கதவை திறந்து வெளியே சென்றார். அப்போது அங்கு வந்த மர்மநபர் ஒருவர் திடீரென வீட்டுக்குள் புகுந்தார். பின்னர் அவர், அங்கு தூங்கிக் கொண்டிருந்த தனுசு கழுத்தில் கிடந்த 9½ பவுன் தங்க சங்கிலியை பறித்துச் சென்றார். பறிபோன நகையின் மதிப்பு ரூ.3½ லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story