ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி வழங்கக்கூடாது -தொல்.திருமாவளவன் பேட்டி
ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி வழங்கக்கூடாது தொல்.திருமாவளவன் பேட்டி.
சென்னை,
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நேற்று டி.ஜி.பி. சைலேந்திரபாபுவை சந்தித்து மனு ஒன்றை கொடுத்தார். பின்னர் வெளியில் வந்த அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வரும் அக்டோபர்-2 ந்தேதி காந்தி ஜெயந்தி தினத்தன்று தமிழகம் முழுவதும் சமூக நல்லிணக்க பேரணி நடைபெற உள்ளது. பேரணி நடைபெறும் இடங்களில் உரிய அனுமதி மற்றும் பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி, டி.ஜி.பி.டம் மனு கொடுத்துள்ளோம்.
அனைத்து ஜனநாயக சக்திகளையும் ஒன்றிணைத்து, சமூக நல்லிணக்க பேரணியை நடத்த உள்ளோம். அக்டோபர் 2-ந் தேதி ஆர்.எஸ்.எஸ். பேரணி தமிழகத்தில் நடத்த வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். உள்நோக்கத்தோடு காய்களை நகர்த்தி வருகிறது. ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அரசு அனுமதி வழங்கக்கூடாது. தமிழகத்தில் நடைபெற்று வரும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களில் யார் ஈடுபட்டு இருந்தாலும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.