கள்ளச்சாராயம் விற்பனையை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் - கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி


கள்ளச்சாராயம் விற்பனையை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் - கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி
x
தினத்தந்தி 16 May 2023 5:01 PM IST (Updated: 16 May 2023 5:52 PM IST)
t-max-icont-min-icon

கள்ளச்சாராயம் விற்பனையை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

புதுச்சேரி ,

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்ததில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் 40க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றுவருகிறார்கள்.

இந்த நிலையில் இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி துணைநிலை கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாவது ,

கள்ளச்சாராயம் விற்பனையை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.புதுச்சேரியில் போதைப்பெருள் மற்றும் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது;எந்த பகுதியில் இருந்து கள்ளச்சாராயம் வந்தாலும் அதனை கட்டுப்படுத்த வேண்டும். என தெரிவித்தார்.


Next Story