மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை 5 பேர் கைது


மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை  5 பேர் கைது
x

களியக்காவிளையில் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்பட்டது. இதையொட்டி 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

கன்னியாகுமரி

களியக்காவிளை:

களியக்காவிளையில் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்பட்டது. இதையொட்டி 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை

களியக்காவிளை பகுதியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பதாக புகார்கள் வந்தன. அதைத்தொடர்ந்து களியக்காவிளை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சுவாமி தலைமையிலான போலீசார் ரோந்து சென்றபோது, சந்தேகப்படும்படி திரிந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.

அவர் பெயர் அலெக்ஸ் (வயது 38), களியக்காவிளை ஆர்.சி.தெருவை சேர்ந்தவர் என்றும் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதற்காக வைத்து இருந்ததும் தெரிய வந்தது.

அதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து, சின்ன சின்ன பொட்டலங்களாக வைத்து இருந்த 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

கைது

இதே போல் சப்-இன்ஸ்பெக்டர் சிந்தாமணி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது கஞ்சா வைத்து இருந்ததாக பனச்சமூடு தேங்காய் பாறையை சேர்ந்த அப்துல் ஷமி (40), செக்கட்டி குழி தாணிமூடு பகுதியைச் சேர்ந்த ரசலுதின் (24), பாறவிளை புத்தன் வீட்டைச் சேர்ந்த ரியாஸ்கான் (22), ஊற்துக்குளிவிளாகம் அகில் (21) ஆகியோரை கைது செய்து, 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

5 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story