சத்தி வேளாண்மை உற்பத்தியாளர் சங்கத்தில் ரூ.50 லட்சத்துக்கு பருத்தி விற்பனை


சத்தி வேளாண்மை உற்பத்தியாளர் சங்கத்தில்  ரூ.50 லட்சத்துக்கு பருத்தி விற்பனை
x
தினத்தந்தி 23 Jun 2022 3:09 AM IST (Updated: 23 Jun 2022 3:11 AM IST)
t-max-icont-min-icon

சத்தி வேளாண்மை உற்பத்தியாளர் சங்கத்தில் ரூ.50 லட்சத்துக்கு பருத்தி விற்பனையானது.

ஈரோடு

சத்தியமங்கலம்:

சத்தியமங்கலம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் நடந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம், செண்பகபுதூர், மேட்டூர், அரியப்பம்பாளையம், அரசூர், இண்டியம்பாளையம், பெரியகுளம், ராஜன்நகர், கொத்துக்காடு, கொத்தமங்கலம், பீர்கடவு, டி.ஜி.புதூர் பகுதி விவசாயிகள் 1,100 மூட்டை பருத்தியை ஏலத்துக்கு கொண்டுவந்திருந்தார்கள்.

இதில் ஒரு குவிண்டால் பருத்தி 9,869 ரூபாய் முதல் 10 ஆயிரத்து 772 ரூபாய் வரை ஏலம் போனது. மொத்தம் ரூ.50 லட்சத்துக்கு பருத்தி விற்பனையானது.

சத்தியமங்கலம், புளியம்பட்டி, கோவை, அன்னூர், அவினாசி ஆகிய பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் பருத்தி மூட்டைகளை வாங்கிச்சென்றார்கள்.

இதற்கான ஏற்பாடுகளை சங்கத்தின் வேளாண்மை இயக்குனர் இளங்கோ செய்திருந்தார்.


Related Tags :
Next Story