ரூ.1½ கோடிக்கு தானியங்கள் விற்பனை


ரூ.1½ கோடிக்கு தானியங்கள் விற்பனை
x
தினத்தந்தி 1 Feb 2023 6:45 PM GMT (Updated: 1 Feb 2023 6:45 PM GMT)

அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.1½ கோடிக்கு தானியங்கள் விற்பனையானது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அருகே அரகண்டநல்லூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு விற்பனைக்காக தானிய மூட்டைகள் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்துக்கு விவசாயிகள் விற்பனைக்காக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல்மூட்டைகளை கொண்டு சென்றனர். அதனை வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கினர். இதன் மூலம் ஒரு மூட்டை நெல் அதிகபட்சமாக ரூ.1,830-க்கும் குறைந்தபட்சமாக ரூ. 1,259-க்கும் விற்பனையானது. இதேபோல் ஒரு மூட்டை மணிலா அதிகபட்சமாக ரூ.8.996-க்கும், குறைந்த பட்சமாக ரூ.8,659-க்கும், எள் அதிகபட்சமாக ரூ. 12 ஆயிரத்து 996-க்கும், குறைந்தபட்சமாக ரூ.6,869-க்கும், உளுந்து அதிகபட்சமாக ரூ.7,178-க்கும், குறைந்தபட்சமாக ரூ.6,889-க்கும், மக்காச்சோளம் அதிகபட்சமாக ரூ.2244-க்கும், குறைந்தபட்சமாக ரூ.2148-க்கும் விற்பனையானது. இது தவிர பச்சைப்பயிர், கேழ்வரகு, தினை உள்ளிட்ட தானிய மூட்டைகளும் விற்பனையானது. இதன் மூலம் தானிய மூட்டைகள் மொத்தம் ரூ.1 கோடியை 60 லட்சத்துக்கு தானியங்கள் விற்பனையானது. இந்த தகவலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Next Story