மரக்கன்றுகள் நடும் விழா


மரக்கன்றுகள் நடும் விழா
x

மத்திய தொழிற் பாதுகாப்பு படை பயிற்சி மைய வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.

ராணிப்பேட்டை

அரக்கோணம்

அரக்கோணம் நகரி குப்பத்தில் உள்ள மத்திய தொழிற் பாதுகாப்பு படை பயிற்சி மையம், சென்னை ரோட்டரி சங்கம், தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் தமிழ்நாடு வனத்துறையினர் இணைந்து பயிற்சி மைய வளாகத்தில் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.

ரோட்டரி சங்க தலைவர் ராஜசேகரன் சுப்பையா தலைமை தாங்கினார். தொழிற் பாதுகாப்பு படை பயிற்சி மைய முதல்வர் டி.ஐ.ஜி. சாந்தி ஜி.ஜெய்தேவ் முன்னிலை வகித்தார்.

பின்னர் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன.

அதைத்தொடர்ந்து தக்கோலம் கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்கள் சுற்றுச்சூழல் குறித்து நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பாரா ஸ்டேட் வங்கி உதவி பொது மேலாளர் வரதராஜன், வனத்துறையினர் செந்தில்குமார், பாண்டுரங்கன் மற்றும் பயிற்சி மைய அலுவலர்கள், பயிற்சி வீரர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story