மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி


மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி
x

மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

நீலகிரி

கூடலூர்


நீலகிரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும் மாவட்ட நீதிபதியுமான முருகன் உத்தரவின்படி உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பந்தலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வட்ட சட்டப்பணிகள் குழு தலைவர் சிவக்குமார் நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். தொடர்ந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.


இந்த நிகழ்ச்சியில் நீதிமன்ற வழக்கறிஞர்களும், ஊழியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதேபோல குன்னூர் அருகே உள்ள அளக்கரை கிராமத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு குன்னூர் சார்பு நீதிபதி சந்திரசேகர் தலைமை வகித்தார். குன்னூர் விரைவு நீதிமன்ற நீதிபதி அப்துல் சலாம், குன்னூர் மாஜிஸ்திரேட்டு ராஜ் கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.


தொடர்ந்து உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி அளக்கரை கிராமத்தில் சோலை மர நாற்றுக்களை நீதிபதிகள் நடவு செய்தனர். இதில் சட்டப்பணிகள் மைய அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story