சாத்தான்குளம், உடன்குடி பகுதியில் செவ்வாய்க்கிழமை மின்தடை


சாத்தான்குளம், உடன்குடி பகுதியில்  செவ்வாய்க்கிழமை மின்தடை
x
தினத்தந்தி 20 Nov 2022 6:45 PM GMT (Updated: 20 Nov 2022 6:46 PM GMT)

சாத்தான்குளம், உடன்குடி பகுதியில் செவ்வாய்க்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

சாத்தான்குளம், உடன்குடி பகுதியில் நாளை (செவ்வாய்க்கிழமை) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இதுகுறித்து திருச்செந்தூர் கோட்ட மின் விநியோக செயற்பொறியாளர் விஜயசங்கரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

மாதாந்திர பராமரிப்பு பணி

திருச்செந்துர் கோட்டத்திற்குட்பட்ட சாத்தான்குளம் உப மின்நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. அதனால் சாத்தான்குளம் உபமின் நிலையத்தை சார்ந்த சாத்தான்குளம், முதலூர், கருங்கடல், வெங்கடேசபுரம் ஆகிய பகுதிகளிலும், நாசரேத் உபமின் நிலையத்தை சார்ந்த நாசரேத், கச்சனாவிளை, நெய்விளை, வெள்ளமடம், எழுவரைமுக்கி, தேரிப்பனை பகுதிகளிலும்,

தட்டார்மடம்

செம்மறிக்குளம் உபமின்நிலையத்தை சார்ந்த மெஞ்ஞானபுரம், அனைத்தலை, ராமசாமிபுரம், லெட்சுமிபுரம், வாகைவிளை, மானாடு, செட்டிவிளை பகுதிகளிலும், நடுவக்குறிச்சி உபமின் நிலையத்தை சார்ந்த நடுவக்குறிச்சி, தட்டார்மடம், கொம்டிக்கோட்டை, சுண்டன்கோட்டை, உதிரமாடன்குடியிருப்பு, பிச்சிவிளை, அழகப்பபுரம் பகுதிகளிலும், பழனியப்பபுரம் உபமின் நிலையத்தை சார்ந்த பழனியப்பபுரம், அம்பலச்சேரி, அறிவான்மொழி, கட்டாரிமங்களம், மீரான்குளம், தேர்க்கன்குளம், ஆசிர்வாதபுரம், கருங்கடல், கோமனேரி, பகுதிகளிலும்,

உடன்குடி

உடன்குடி உபமின் நிலையத்தை சார்ந்த உடன்குடி, தைக்காவூர், சீர்காட்சி, பிச்சிவிளை, செட்டியாபத்து, ஞானியார்குடியிருப்பு, தாண்டவன்காடு, தண்டுபத்து, வெள்ளாளன்விளை, பரமன்குறிச்சி, கொட்டங்காடு, மாதவன்குறிச்சி, மெய்யூர், பிறைகுடியிருப்பு, கடாச்சபுரம், அன்பின்நகரம் ஆகிய பகுதிகளிலும் நாளை காலை 8 மணி முதல் மாலை 5 வரை மின்சாரம் வினியோகம் இருக்காது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Next Story