சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.735-க்கு ஏலம்


சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.735-க்கு ஏலம்
x

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.735-க்கு ஏலம் போனது.

ஈரோடு

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி நேற்று காலை 7 மணிக்கு பூக்கள் ஏலம் தொடங்கியது.

இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் 1½ டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

நேற்றைய ஏலத்தில் மல்லிகைப்பூ கிலோ ரூ.735-க்கும், முல்லை ரூ.800-க்கும், காக்கடா ரூ.450-க்கும், செண்டுமல்லி ரூ.66-க்கும், பட்டுப்பூ ரூ.135-க்கும், கனகாம்பரம் ரூ.450-க்கும், சம்பங்கி ரூ.100-க்கும், அரளி ரூ.150-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.120-க்கும் ஏலம் போனது.


Related Tags :
Next Story