ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை


ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை
x

மதுரை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

மதுரை

மதுரை மாவட்டத்தில் 2022-23-ம் ஆண்டு கல்வியாண்டில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரை கல்வி பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு கல்வி உதவிதொகை வழங்கப்படுகிறது. அதற்காக மாணவர்களின் வங்கி கணக்கு எண், ஆதாருடன் இணைக்கப்படுவது கட்டாயமாகும். மதுரை மாவட்டத்தில் கடந்த கல்வியாண்டில் உதவித்தொகை பெற்ற மாணவர்களின் பெரும்பாலான மாணவர்களின் வங்கி கணக்குகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாமல் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அந்த மாணவர்கள் தங்களுடைய வங்கி கணக்கு எண்ணை ஆதாருடன் இணைக்க வேண்டும். மேலும் வங்கி கணக்கு பயன்பாட்டில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். புதிதாக கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள், போஸ்ட் ஆபிசில் வங்கி கணக்கு எண் (IPPB Bank) தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் இதற்காக பள்ளிகளில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதனை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று கலெக்டர் அனிஷ் சேகர் கேட்டு கொண்டு உள்ளார்.


Related Tags :
Next Story