போலீசாரின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை


போலீசாரின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை
x

போலீசாரின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

பெரம்பலூர்

கடந்த 2021-22-ம் கல்வி ஆண்டில் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வில் பெரம்பலூர் மாவட்டத்தில் பணிபுரியும் போலீசாரின் குழந்தைகளில் முதல் 8 இடங்களை பிடித்தவர்களுக்கு மேற்படிப்புக்கு ஊக்குவிக்கும் வகையில் காவலர் சேமநல நிதியில் இருந்து உதவித்தொகை வழங்கும் விழா மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் நடந்தது. விழாவிற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தலைமை தாங்கி முதல் இடத்தை பிடித்தவருக்கு ரூ.7 ஆயிரத்து 500-ம், 2-ம் இடத்தை பிடித்தவருக்கு ரூ.5 ஆயிரத்து 500-ம், 3-ம் இடத்தை பிடித்தவருக்கு ரூ.3 ஆயிரத்து 500-ம், 4 முதல் 8 இடங்களை பிடித்தவர்களுக்கு தலா ரூ.2 ஆயிரத்து 500-ம் வழங்கி பாராட்டினார்.


Next Story