தூய்மை பணியாளர் குடும்பத்திற்கு உதவித்தொகை


தூய்மை பணியாளர் குடும்பத்திற்கு உதவித்தொகை
x
தினத்தந்தி 22 Aug 2023 12:15 AM IST (Updated: 22 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூய்மை பணியாளர் குடும்பத்திற்கு உதவித்தொகையை கலெக்டர் விஷ்ணுசந்திரன் வழங்கினார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து கலெக்டரிடம் மனு அளித்தனர். இவ்வாறு பொதுமக்கள் கொடுத்த 256 மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அந்தந்த அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். அழகன்குளம் ஊராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளராக பணிபுரிந்தபோது மரணமடைந்த சித்ராதேவி என்பவரின் இறுதி சடங்கிற்கான உதவித்தொகை தாட்கோ தூய்மை பணியாளர் நலவாரியம் சார்பில் ரூ.25 ஆயிரத்திற்கான காசோலையை அவரது வாரிசுதாரர் காளிமுத்துவிடம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அபிதா ஹனிப், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நல அலுவலர் சிவசுப்பிரமணியன், தாட்கோ மேலாளர் தியாகராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story