மணல் கடத்திய லாரி பறிமுதல்; டிரைவர் கைது


மணல் கடத்திய லாரி பறிமுதல்; டிரைவர் கைது
x

மணல் கடத்திய லாரி பறிமுதல்; டிரைவர் கைது செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை

விராலிமலை:

விராலிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் தலைமையிலான போலீசார் துலுக்கம்பட்டி பிரிவு சாலை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது லாரியில் 5 யூனிட் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் லாரி டிரைவர் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த செந்தில்குமார் (வயது 40) என்பவரை கைது செய்தனர்.


Next Story