கிரிக்கெட் போட்டிக்கு வீராங்கனைகள் தேர்வு


கிரிக்கெட் போட்டிக்கு வீராங்கனைகள் தேர்வு
x
தினத்தந்தி 9 May 2023 12:15 AM IST (Updated: 9 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில் கிரிக்கெட் போட்டிக்கு வீராங்கனைகள் தேர்வு 13-ந் தேதி நடக்கிறது

கடலூர்

கடலூர்

தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் சங்கம் சார்பில் பெண்களுக்கான கிரிக்கெட் தேர்வு வருகிற 13-ந் தேதி (சனிக்கிழமை) காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கடலூர் மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பங்கு பெறுபவர்கள் 13 முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும். போட்டியில் கலந்து கொள்பவர்கள் வெள்ளை நிற உடை அணிந்து வரவேண்டும். விளையாட்டு வீரர்களுக்கு அனுமதி இலவசம். இதுதொடர்பான கூடுதல் விவரங்களை 98423 09909 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். மேற்கண்ட தகவலை கடலூர் மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் கூத்தரசன் தெரிவித்துள்ளார்.


Next Story