ஆட்டோவை விற்று தனுஷ்ேகாடிக்கு தப்பி வந்த டிரைவரின் குடும்பத்தினர்


ஆட்டோவை விற்று தனுஷ்ேகாடிக்கு தப்பி வந்த டிரைவரின் குடும்பத்தினர்
x
தினத்தந்தி 4 Feb 2023 6:45 PM GMT (Updated: 4 Feb 2023 6:46 PM GMT)

இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் அந்நாட்டு மதிப்பில் ரூ.600-க்கும், அரிசி கிலோ ரூ.300-க்கும் விற்பனையாவதால், அங்கு வாழ முடியாமல் ஆட்டோவை விற்று டிரைவரின் குடும்பத்தினர் தனுஷ்கோடிக்கு தப்பி வந்தனர்.

ராமநாதபுரம்

தனுஷ்கோடி,

இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் அந்நாட்டு மதிப்பில் ரூ.600-க்கும், அரிசி கிலோ ரூ.300-க்கும் விற்பனையாவதால், அங்கு வாழ முடியாமல் ஆட்டோவை விற்று டிரைவரின் குடும்பத்தினர் தனுஷ்கோடிக்கு தப்பி வந்தனர்.

ெபாருளாதார நெருக்கடி

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதனால் அங்கிருந்து ராமேசுவரத்தை அடுத்த தனுஷ்கோடிக்கு, படகுகளில் அகதிகள் அவ்வப்போது வந்து இறங்குகிறார்கள்.

நேற்று முன்தினம் இரவும் அகதிகளாக சிலர் வந்து இறங்கி உள்ளதாக மீனவர்கள் மூலம் போலீசாருக்கு தகவல் வந்தது. அதைத்தொடர்ந்து ராமேசுவரம் கடலோர போலீசார் மற்றும் கியூ பிரிவு போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

தனுஷ்கோடி எம்.ஆர்.சத்திரம் கடற்கரையில் நின்றிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் உள்ளிட்ட 4 பேரை மீட்டு வாகனத்தில் ஏற்றி, மண்டபம் கடலோர போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர்.

4 அகதிகள்

போலீசார் விசாரணையில், இலங்கை யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியை சேர்ந்த ஜெயபரமேசுவரன் (வயது 43), அவருடைய மனைவி வேலுமாலினிதேவி (42) மற்றும் குழந்தைகள் தமிழினி (12), மாதவன் (7) ஆகியோர் என்பது தெரியவந்தது.

இலங்கையில் இருந்து அகதியாக வந்தது ஏன்? என்பது பற்றி ஜெயபரமேசுவரன் கூறியதாவது:-

பெட்ரோல்-டீசல் விலை

இலங்கையில் அத்தியாவசிய பொருட்கள் விலை பலமடங்கு உயர்ந்துள்ளது. அங்கு ஆட்டோ ஓட்டி வந்தேன். பெட்ரோல் மற்றும் டீசல், கியாஸ் விலை குறைந்தபாடில்லை.

12 லிட்டர் கியாஸ் சிலிண்டர் ரூ.5500 ஆக விலை உள்ளது. பெட்ரோல் 1 லிட்டர் ரூ.500 முதல் ரூ.600 வரை விற்கப்படுகிறது. அரிசி கிலோ ரூ.300. எனவே அங்கு ஒவ்ெவாரு நாளையும் சிரமத்துக்கு நடுவேதான் நகர்த்தி வந்தோம்.

வேறு வழி இல்லாததால் எனக்கு வாழ்வாதாரமாக இருந்த ஆட்டோவை எங்கள் நாட்டு பணம் ரூ.5 லட்சத்திற்கு விற்று, மன்னார் வந்து அங்கிருந்து பிளாஸ்டிக் படகு ஒன்றில் படகோட்டிகளுக்கு ரூ.4 லட்சம் கொடுத்து இந்தியா தப்பி வந்தோம்.

இவ்வாறு அவர் போலீசாரிடம் கூறினார்.

மண்டபம் முகாமில் தங்க வைப்பு

அதே நேரத்தில் ஜெயபரமேசுவரனுக்கு அதிக கடன் இருந்ததால், குடும்பத்தோடு தனுஷ்கோடிக்கு வந்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

நேற்று வந்த 4 பேரையும் சேர்த்து, கடந்த சில மாதங்களில் மட்டும் மொத்தம் 222 பேர் அகதிகளாக தமிழகம் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. விசாரணைக்கு பின்னர் சிறுவன்-சிறுமி உள்பட 4 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட்டு, அங்கு தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.


Related Tags :
Next Story