செம்போர்டு சி.பி.எஸ்.இ. பள்ளியில் பொங்கல் விழா


செம்போர்டு சி.பி.எஸ்.இ. பள்ளியில் பொங்கல் விழா
x

செம்போர்டு சி.பி.எஸ்.இ. பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி செம்போர்டு சி.பி.எஸ்.இ. பள்ளியில் பொங்கல் விழா பள்ளி சேர்மன் கே.எம்.சுப்பிரமணியன் தலைமையில் கொண்டாடப்பட்டது. செயலாளர் ஆர்.கிருபாகரன், துணைத்தலைவர்கள் கனகராஜ், டாக்டர் சீனிவாசன், இணை செயலாளர்கள் டி.வி.மாதவன், சிங்காரவேலன் மற்றும் குறிஞ்சி கல்வி அறக்கட்டளையின் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

விழாவில் மாணவர்கள் வண்ண ஆடைகளை அணிந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர். பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து சமத்துவ பொங்கல் வைத்து மகிழ்ந்தனர். மேலும் பல்வேறு பாரம்பரிய போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

பள்ளி நிர்வாக அலுவலர் கார்த்திக், மேலாளர் சிவா, ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஊர் மக்கள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் பள்ளி முதல்வர் டாக்டர் பிரசாந்த் நன்றி கூறினார்.


Next Story