தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 502 வழக்குகளுக்கு தீர்வு


தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 502 வழக்குகளுக்கு தீர்வு
x

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 502 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

பெரம்பலூர்

தேசிய மக்கள் நீதிமன்றம்

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின்பேரில், பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், குன்னம், வேப்பந்தட்டை ஆகிய பகுதிகளில் உள்ள கோர்ட்டுகளில் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்திற்கு மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான பல்கீஸ் தலைமை தாங்கினார். இதில் குடும்ப நல நீதிபதி தனசேகரன், தலைமை குற்றவியல் நடுவர் மூர்த்தி, சார்பு நீதிபதி அண்ணாமலை, மாவட்ட உரிமைSettlement of 502 cases in the National People's Courtயியல் நீதிபதி ராஜமகேஸ்வர், நீதித்துறை நடுவர்கள் சுப்புலெட்சுமி, சங்கீதா சேகர் ஆகியோர் கொண்ட 4 அமர்வுகளானது நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரித்து தீர்வு வழங்கியது. குன்னம், வேப்பந்தட்டை ஆகிய நீதிமன்றங்களில் தலா ஒரு அமர்வு நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரித்து தீர்வு வழங்கியது.

வழக்குகளுக்கு தீர்வு

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் எடுத்து கொள்ளப்பட்ட மொத்தம் 2 ஆயிரம் வழக்குகளில், வங்கி வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள், சிறு குற்றவியல் வழக்குகள் என 502 வழக்குகளுக்கு ரூ.1 கோடியே 60 லட்சத்து 10 ஆயிரத்து 300-க்கு தீர்வு காணப்பட்டது. அதில் ஒரு மோட்டார் வாகன விபத்து வழக்குக்கு ரூ.1 கோடிக்கு தீர்வு காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தீர்வு பெறப்பட்ட வழக்கின் மனுதாரர்களுக்கு பெரம்பலூர் மாவட்ட முதன்மை நீதிபதி பல்கீஸ் நஷ்ட ஈடு தொகைக்கான ஆணையை வழங்கினார். இதில் வக்கீல்கள், போலீசார், நீதிமன்ற ஊழியர்கள், மனுதாரர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமாகிய சந்திரசேகர் செய்திருந்தார்.


Next Story