நிலப்பிரச்சினை தொடர்பான விசாரணை முகாமில் 8 மனுக்களுக்கு தீர்வு


நிலப்பிரச்சினை தொடர்பான விசாரணை முகாமில் 8 மனுக்களுக்கு தீர்வு
x

நிலப்பிரச்சினை தொடர்பான விசாரணை முகாமில் 8 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட நில மோசடி தடுப்பு சிறப்பு பிரிவு போலீசாரும், பெரம்பலூர் வட்டார வருவாய் துறையினரும் இணைந்து பொதுமக்களின் நிலம் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க சிறப்பு மனு விசாரணை முகாமினை தாசில்தார் அலுவலகத்தில் நடத்தினர். இதில் பெரம்பலூர் வட்டார தாசில்தார் கிருஷ்ணராஜ், மாவட்ட நில மோசடி தடுப்பு சிறப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முகமது அபுபக்கர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நல்லம்மாள், ஏட்டுகள் ரவி சாந்தகுமார், பாலமுருகன் ஆகியோர்கள் பொதுமக்களிடம் இருந்து நிலப்பிரச்சினைகள் தொடர்பான மனுவினை பெற்று விசாரணை நடத்தினர். முகாமில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மொத்தம் 8 மனுக்களுக்கும் உடனடியாக தீர்வு காணப்பட்டது.


Next Story