சண்முகா தொழிற்சாலை கலை அறிவியல் கல்லூரியில் அப்துல் கலாம் நினைவு தினம் அனுசரிப்பு


சண்முகா தொழிற்சாலை கலை அறிவியல் கல்லூரியில்  அப்துல் கலாம் நினைவு தினம் அனுசரிப்பு
x

சண்முகா கல்லூரியில் முன்னாள் ஜனாதிபதி cஅனுசரிக்கப்பட்டது

திருவண்ணாமலை

தண்டராம்பட்டு

திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே அப்துல் கலாம் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி கல்லூரியின் செயலாளர் டி.ஏ.எஸ்.முத்து தலைமையில் பொருளாளர் எம். சீனிவாசன் கல்விப்புல முதன்மையர் அழ.உடையப்பன், கல்லூரி முதல்வர் கே.ஆனந்தராஜ், துணை முதல்வர் அண்ணாமலை ஆகியோர் அப்துல் கலாம் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அதைத் தொடர்ந்து அவர் நினைவாக மரக்கன்றுகளும் நடப்பட்டது. உதவி பேராசிரியர் தீ.எழுமலை அப்துல் கலாம் பெருமைகள் குறித்து பேசினார். இதில் பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை தமிழ் துறை தலைவர் சங்கர் தொகுத்து வழங்கினார்.


Next Story