பெண்ணுக்கு அரிவாள் வெட்டு


பெண்ணுக்கு அரிவாள் வெட்டு
x

பெண்ணுக்கு அரிவாள் வெட்டு- 4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

தென்காசி

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே உள்ள எட்டிச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் அய்யனார் மகள் திலககனி (வயது 30). இவருடைய தாயார் சுப்புலட்சுமிக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த அந்தோணிராஜ் குடும்பத்திற்கும் இடையே பொதுநடைபாதையில் பிரச்சினை ஏற்பட்டு வழக்கு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. சம்பவத்தன்று திலககனி பொதுநடைபாதையில் நடந்து வந்தபோது, அந்தோணிராஜூக்கும், திலக கனிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதம் முற்றியதில் அந்தோணிராஜ் அரிவாளால் திலககனியை வெட்டியதாக கூறப்படுகிறது. மேலும் அவரது உறவினர்கள் 3 பேர் திலககனியை கம்பால் தாக்கி, அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். காயம் அடைந்த திலககனி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்தோணிராஜ் உள்பட 4 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.



Next Story