மண்டல அளவில் பெண்களுக்கான சிலம்ப போட்டி


மண்டல அளவில் பெண்களுக்கான சிலம்ப போட்டி
x

விருதுநகரில் மண்டல அளவில் பெண்களுக்கான சிலம்ப போட்டி நடைபெற்றது.

விருதுநகர்

விருதுநகர்,

விருதுநகர் சக்தி காமராஜர் ஜேசிஸ் சங்கத்தின் சார்பில் விருதுநகர் மண்டல அளவிலான பெண்களுக்கான சிலம்ப போட்டி நடைபெற்றது. இந்நகர் ரோட்டரி சங்க வளாகத்தில் நடைபெற்ற இப்போட்டிகளை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர். இப்போட்டியில் 10 குழுக்கள் சார்பில் 5 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட 200 சிறுமிகள் மற்றும் இளம் பெண்கள் கலந்து கொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஜெயக்குமார், விருதுநகர் மாவட்ட சிலம்பாட்ட கழக தலைவர் ஜாகீர் உசேன், செயலாளர் ஹரிபாஸ்கரன், ஜேசிஸ் சங்க மண்டல தலைவர் ரகுராமன், துணைத்தலைவர் டாக்டர் ராஜகோமதி உள்ளிட்ட மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சக்தி காமராஜர் ஜேசிஸ் சங்க தலைவர் ஈஸ்வரி மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

1 More update

Next Story