Normal
பட்டுக்கூடுகள் விலை உயர்வு
தர்மபுரி ஏல அங்காடியில் பட்டுக்கூடுகள் விலை உயர்ந்தது.
தர்மபுரி
தர்மபுரி:
தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பட்டுக்கூடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த அங்காடிக்கு நேற்று 836 கிலோ பட்டுக்கூடுகளை விவசாயிகள் கொண்டு வந்தனர். நேற்று முன்தினம் அதிகபட்சமாக ரூ.514-க்கு விற்பனையான பட்டுக்கூடு நேற்று கிலோவிற்கு ரூ.123 உயர்ந்தது. அதாவது பட்டுக்கூடு விலை ஒரு கிலோ அதிகபட்சமாக ரூ.637, குறைந்தபட்சமாக ரூ.394, சராசரியாக ரூ.573.19 என்ற விலைகளில் விற்பனை செய்யப்பட்டது. மொத்தம் ரூ.4 லட்சத்து 79 ஆயிரத்து 224 மதிப்பில் பட்டுக்கூடுகள் விற்பனை ஆனது.
Related Tags :
Next Story